கொரோனா அதிகம் பாதிப்பு – 2-வது இடத்தில் செங்கல்பட்டு

132

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 291 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பட்டியலில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு உள்ளது.

இது குறித்து மாவட்ட சுகாதாத்துறை வெளியிட்டு அறிக்கையில்,  செங்கல்பட்டு மாவட்டத்தில் புதியதாக 291 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மவுண்ட் பகுதியில் 29 பேருக்கும், காட்டாங்குளத்தூரில் 28 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும். செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிற்கு 100 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6ஆயிரத்து 98 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பட்டியலில் செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of