இந்தியில் பேசிய தலைமை நிர்வாகி..! வெளிச்சத்திற்கு வந்த உண்மை..! குழந்தை மீட்கப்பட்டது எப்படி..?

417

சென்னை மெரினாவில் பலூன் விற்கும் தொழில் செய்து வருபவர் ஜான்போஸ்லே. இவருக்கு ரந்தீஷா என்ற மனைவி உள்ளார். வடமாநில தம்பதிகளான இவர்களுக்கு, 7 மாத குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் இவர்களுக்கு சினிமா ஆசை காட்டி, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ரேவதி என்பவர் அத்தம்பதிகளின் குழந்தையை கடத்தினார். பின்னர் சிசிடிவி மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் நர்ஸ் ஜூலியட் என்பவரின் உதவியால் குழந்தையை போலீஸார் மீட்டனர்.

இகுறித்து நர்ஸ் ஜூலியட் பேசியது பின்வருமாறு:-

நான் கடந்த 14-ஆம் தேதி அன்று மருத்துவமனையின் 5-வது மாடிக்கு சென்றேன். அப்போது பெண் ஒருவர், குழந்தைக்கு புட்டி பால் கொடுத்துக்கொண்டிருந்தார். குழந்தைக்கு ஆறு மாதம் இருக்கும்.

அதனால் அவர் மீது எனக்கு சந்தேகம் எழுந்தது. உடனே அவரிடம் சென்று விசாரித்தேன். அதற்கு பதில் அளித்த அந்த பெண், தனக்கு இங்கே தான் குழந்தை பிறந்தது என்றும், தற்போது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், சிகிச்சைக்கு வந்துள்ளேன் என்றும் பதில் அளித்தார்.

இதையடுத்து உடனே மருத்துவமனை நிர்வாகத்துக்கு அந்த பெண் குறித்து தகவல் தெரிவித்தேன். இதையடுத்து அந்தப் பெண் மறுநாள், பெண் குழந்தை என்று பதிவு செய்திருந்தார். ஆனால், பெயரை சாம் என்று கூறியிருந்தார்.

இந்த சம்பவம் நடைபெற்று, 4 நாட்கள் கழித்து, காவல்துறையினர், எங்கள் மருத்துவமனைக்கு வந்து விசாரித்தனர். அப்போது, நான் 14-ஆம் தேதி நடைபெற்ற விஷயங்கள் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தேன்.

இதையடுத்து காவல்துறையினர், மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தனர். அதில், அந்த பெண், குழந்தையை கடத்தியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண்ணிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது, எங்கள் மருத்துவமனையின் தலைமை நிர்வாகி ஒருவர், இந்தியில் பேசினார்.

உடனே அந்தக் குழந்தை தலையைத் தூக்கி சத்தம் வருவதைக் கவனித்தது. அதனால், அந்தக் குழந்தைக்கு தமிழ் தெரியாது, இந்தியில் பேசினால் கவனிக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டோம். இதற்கிடையே, போலீசார் குழந்தையின் பெற்றோரை மருத்துவமனைக்கு வரவழைத்தனர்.

அவர்களை பார்த்த குழந்தை, அந்த பெண்ணிடம் இருந்து, தனது தாயிடம் சென்றது. பின்னர், குழந்தையை கடத்தியிருப்பது அந்த பெண் தான் என்பதை உறுதி செய்த காவல்துறையினர், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of