விராட் கோலியை கைது செய்யக்கோரி வழக்கு..! காரணம் என்ன..?

585

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. கிரிக்கெட் மட்டுமின்றி, விளம்பரப் படங்களிலும் பிசியாக நடித்து வரும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆன்லைன் சூதாட்ட விளம்பரப்படம் ஒன்றில் நடித்தார்.

இவர் மட்டுமின்றி, நடிகை தமன்னாவும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அது தொடர்பான விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ்,  ஹேமலதா அமர்வு முன்னிலையில் இந்த மனுவை விசாரணைக்கு எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து ஆகஸ்ட் 4ம் தேதி இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement