மத்திய சென்னை யாருக்கு ? – வாக்குகள் சிதறுமா? – சிறப்பு தொகுப்பு

2032

பாராளுமன்றத் தேர்தலில் பல்வேறு முனைப்போட்டியாக இந்த தேர்தல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக கடந்த தேர்தலில் தனித்து களம் கண்டு தமிழகத்தில் 39 க்கு 37 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது.

ஆனால் இம்முறை பாஜக-பாமக – தேமுதிக என கூட்டணி கட்சிகளொடு களமிறங்குகிறது.

இந்த நிலையில் திமுகவும் காங்கிரஸ் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து களமிறங்குகிறது.

கருணாநிதி, ஜெயலலிதா என இரண்டு ஆளுமைகள் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் இரு கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.

கடந்த கால மக்களவை தேர்தல் வெற்றியும்,தோல்வியும் மத்திய சென்னையில் தற்போதைய வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து பார்ப்போம்.

இதில் மத்திய சென்னை தொகுதியில் திமுக  நேரடியாக களம் காண்கிறது. இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் திமுக சார்பில் களமிறங்குகிறார்.

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற 14 வது மக்களவை தேர்தலில் தயாநிதி மாறன்– 3,16,329 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அதிமுக சார்பில் போட்டியிட்ட பாலகங்கா – 1,82,151 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.

அப்போது வெற்றி வித்தியாசம்- 1,34,178 வாக்குகளாக இருந்தது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற 15 வது மக்களவை தேர்தலில் அதே தொகுதியில் தயா நிதி மாறன் 2,85,783 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.

அதிமுக சார்பில் போட்டியிட்ட முகம்மது அலி ஜின்னா 2,52,329 பெற்று தோல்வியடைந்தார்.
அப்போது வெற்றி வாக்கு வித்தியாசம் 33,454 வாக்குகளாக இருந்தது.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் அப்பொதைய கணக்கெடுப்பு வரை வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 13,27,670. 

இந்த 2014 மக்களவை தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட்ட  தயாநிதி மாறன் 2,87,455 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

அதிமுக சார்பில் போட்டியிட்ட விஜயக்குமார் 3,33,296 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.

அப்போது வெற்றி வித்தியாசம் 45,841 வாக்குகளாக இருந்தது.

இந்த நிலையில் தற்பொழுது நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் தயாநிதி மாறன் போட்டியிடுகிறார்.

அதிமுக கூட்டணி கட்சியான பாமக சார்பில் இந்த தொகுதியில் ஷாம் பால் பொட்டியிடுகிறார்.

அதிமுகவிலிருந்து பிரிந்த டிடிவி தினகரன் கட்சியான அமமுக சார்பில் அதன் கூட்டணி கட்சியான SDPI  கட்சி சார்பில் தெஹ்லான் பாகவி போட்டியிடுகிறார்.

தற்போதைய சூழலில் அதிமுக சார்பில் நேரடி வேட்பாளர் களமிறக்கப்படாததால் பாமக வெற்றி வாய்ப்பு அறிதான ஒன்றாக கருதப்படுகிறது.

அதுமட்டுமின்றி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக விலிருந்து விலகிய அமமுக விற்கு சரிபாதியாக அதிமுக வின் வாக்குகள் பிரியும் என தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் சிறுபான்மையினர் அதிகம் அங்கம் வகிக்கும் தொகுதியான மத்திய சென்னை தொகுதியில் சிறுபான்மை மக்கள் அதிகம் கொண்ட கட்சியான SDPI கட்சி, அமமுக கூட்டணியில் போட்டியிடுவது தயாநிதிமாறனுக்கு அதிகம் நெருக்கடியை கொடுக்கும் என தெரிகிறது.

அதிமுக வாக்குகள் மட்டுமல்லாது, இஸ்லாமியர்களின் வாக்குககள் அதிகம் பிரியும் என்பதால் இந்த தொகுதியில் இருமுனை போட்டியாகவே நிலவும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of