சென்ரல் ரயில்வே நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர்! மோடி பேச்சு!

162

வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியலில் பல்வேறு பரபரப்பான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் முக்கிய கட்சிகளான, அதிமுக மற்றும் திமுக ஆகியன தங்களது கூட்டணி கட்சிகளை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் அதிமுக அவர்களது கூட்டணி கட்சிகளுடன் பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு குறித்த அறிவிப்பை தமிழில் வெளியிட முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு 14 ஆயிரம் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சென்ரல் ரயில்வே நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்றும் தெரிவித்தார்.