சென்னையில் கொரோனாவால் பெண் தலைமை செவிலியர் உயிரிழப்பு..!

915

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், பெண் தலைமை செவிலியர் உயிரிழந்துள்ளார்.

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த 58 வயதான பெண் தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா. இவர் செவிலியர்களுக்கான பணிநேரம் ஒதுக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கவனித்து வந்தவர்.

இதனைத்தொடர்ந்து இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

அதனால் கடந்த 26-ஆம் தேதி முதல் உடல்நலக்குறைவால் ராஜீவ் காந்தி மருத்துவமனையிலேயே 3-ஆம் தளத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் நேற்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா உறுதி செய்யப்பட்டு உயிரிழந்த முதல், தலைமை பெண் செவிலியர் இவராவார்.

Advertisement