மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் – வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி மனு

990

மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி, அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவியை 7 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக 17 பேரை சென்னை அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் கைது செய்தது.

14-accuse

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு எதிராக கடந்த வாரம் 300 பக்க குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை மாநில போலீசார் அவசர அவசரமாக விசாரணை நடத்துவதாலும் நியாயமான விசாரணை நடக்காது எனக் கூறிவழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவுக்கு அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பதில் அளிக்க நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of