நாளை 38 ரயில்கள் ஓடாது…, இதுல உங்க ஏரியாவும் இருக்கா?

645

பராமரிப்புப் பணி காரணமாகச் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை செல்லும் மின்சார தொடர்வண்டிச் சேவையில் நாளை மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் தொடர்வண்டிச் சேவை காலை 8 மணி முதல் பிற்பகல் 1.40 மணி வரை நிறுத்தப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் பராமரிப்புக்குப் பின்னரான பிற்பகல் 2 மணிக்குச் சேவை தொடங்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

அதேபோன்று மறு மார்க்கத்தில் காலை 8.10 மணி முதல் பிற்பகல் 1.50 மணி வரையிலும் மின்சார தொடர்வண்டிச் சேவை நிறுத்தப்படுகிறது. இந்த வழித்தடத்தில் பராமரிப்புக்குப் பின்னரான பிற்பகல் 2.10 மணிக்குச் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு வழித்தடத்திலும் மொத்தமாக 38 ரயில்களின் சேவைகள் நிறுத்தப்படுவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of