காற்றில் பறக்கும் சென்னை கமிஷனர் பிரகாஷ் உத்தரவு – கண்டு கொள்ளாத அதிகாரிகள்  

494

இரண்டு தினங்களுக்கு முன்னர்  பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் அனுமதி இல்லாமல் விளம்பர பேனர்கள் வைத்தால் மாநகராட்சி சட்டம் 1919 ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். குறிப்பாக சென்னையில் விளம்பர பேனர்கள் உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அதன் படி எங்கும் எந்த வித விளம்பர பேனர்களும் மாநகராட்சியின் முறையான அனுமதியின்றி வைத்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சமீபத்திய மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷின் அறிக்கை, அனுமதியின்றி பேனர் வைத்தால் ஓர் ஆண்டு சிறை தண்டனை, 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுமென எச்சரிக்கை அலாரமும் அடித்தது.

ஆனால், வடபழனி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அதிகாரிகள் கண்டும் காணாதபடி கடந்து போகின்றனர்.

கார்பொரேஷன் கமிஷனர் பிரகாஷின் உத்தரவை மாநகராட்சி அதிகாரிகள் ஒருவரும் பொருட்படுத்துவதே இல்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அந்த பகுதிகளில் இருக்கும் இந்த பேனர்கள் ..

கமிஷனர் பிரகாஷின் உத்தரவை அதிகாரிகள் காற்றில் பறக்கவிட காரணம் வேறொன்றுமில்லை

காசு,,பணம்,, துட்டு,மணி,, மணி,,, என பாடல் பாடுகின்றனர் அப்பகுதி மக்கள்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of