இ-டெண்டர் மூலம் விடப்படும் ஒப்பந்தங்களின் மூலம் 750 கோடி ரூபாய் ஊழல்

661

இ-டெண்டர் மூலம் விடப்படும் ஒப்பந்தங்களின் மூலம் 750 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாக அரசு பதிவுபெற்ற ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை மாநகராட்சி மூலம் வழங்கப்படும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் ஒப்பந்தம் உட்பட்ட பல ஒப்பந்தங்களில் ஊழல் நடைபெற்றிருப்பதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் போஸ், கடந்த நான்கு ஆண்டுகளாக ஆரோக்கியமான் முறையில் டெண்டர் விடப்படவில்லை என்றும், அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே டெண்டர் கொடுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.