சென்னை மாநகராட்சிக்கு கமிஷனர் பிரகாஷா? செயற்பொறியாளர் பெரியசாமியா?

786

சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், அனுமதி இல்லாமல் விளம்பர பேனர்கள் வைத்தால் மாநகராட்சி சட்டம் 1919-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி அனுமதியில்லாமல் சென்னையின் பிரதான பகுதிகளான தி.நகர், வடபழனி, கோடம்பாக்கம், அசோக் நகர் போன்ற பகுதிகளில் எக்கச்சக்கமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதை சத்தியம் டிஜிட்டலில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

செய்தி : காற்றில் பறக்கும் சென்னை கமிஷனர் பிரகாஷ் உத்தரவு – கண்டு கொள்ளாத அதிகாரிகள்

மாநகராட்சியின் பத்தாவது மண்டல அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டு விளம்பர பேனர்களை அகற்றாமல் இருந்து வந்தனர். தகவலறிந்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உடனடியாக, கோடம்பாக்கம்,வடபழனி பகுதிகளில் இருந்த விளம்பர பேனர்களை அகற்ற உத்தரவிட்டார்.

செய்தி : சாட்டையை சுழற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் – அகற்றப்பட்ட விளம்பர பேனர்கள்

அதன் படி 9-ம் தேதி இரவு அத்தனை விளம்பர பேனர்களும் அகற்றப்பட்டது. ஆனால் இரண்டே நாட்களில் எந்த இடங்களில் பேனர்கள் அகற்றப்பட்டதோ, அதே இடத்தில் மீண்டும் விளம்பர பேனர்கள் முளைத்து விட்டது.

சென்னை மாநகராட்சியின் 10 வது மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் செயற்பொறியாளர் பெரியசாமி, இரண்டு நாட்கள் கழித்து பேனர்களை வைத்துக்கொள்ளுங்கள் என்று சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளார் எனக்கூறுகிறார்கள் ஏரியாவாசிகள்.

என்ன நடக்கிறது?

தி.நகர், வடபழனி, கோடம்பாக்கம், அசோக் நகர் ஏரியாவுக்கென தனியாக பெரியசாமியை ஏதும் கமிஷனராக நியமித்துவிட்டார்களோ என சந்தேகம் கிளப்புகிறார்கள் பொதுமக்கள்.

ஆணையாளர் பிரகாஷ் உடன் செயற்பொறியாளர் பெரியசாமி மல்லுக்கட்டு நடத்தும் அளவிற்கு சென்றுவிட்டது சென்னை மாநகராட்சி நிர்வாகம்.

எங்கே போய் முடியுமோ இந்த விவகாரம்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of