சென்னை மாநகராட்சியை தனியார் மையமாக்குவதை கண்டித்தும், 12000 ஊழியர்கள் பணியினை நிரந்தரம் செய்ய கோரியும் நாளை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை சென்னை மாநகராட்சி அனைத்து ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது

சென்னை மாநகராட்சியில் குப்பை எடுக்கும் பணியினை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பாக சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய சீனிவாசலு (தனியார் மயமாக்கல் எதிர்ப்பு குழு), 9, 10, 13 ஆகிய மண்டலங்களில் ஏற்கனவே தனியார் நிறுவனம் மூலம் குப்பை எடுக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் மீதமுள்ள மண்டலங்களிலும் 80% தனியாருக்கு விடுவது என மாநகராட்சி முடிவடுத்துள்ளது. பலகட்ட பேச்சுவார்த்தையில் பலனில்லாத காரணத்தினால், நாளை முதல் வேலை நிறுத்தம் செய்வது உள்ளிட்ட பல்வேறு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் எனவும், பல இடங்களில் சாலை மறியல் செய்யவும் திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

வேலை நிறுத்தத்திற்கு எங்களை மாநகராட்சி தள்ளியுள்ளது ஒட்டுமொத்தமாக துப்புரவு, மலேரியா தடுப்பு துறை, தெருவிளக்கு பராமரித்தல் உள்ளிட்ட 7துறையை சேர்ந்த 8000 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 12000 தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் வாழ்வாரத்தரம் பாதிக்கப்படுகிறது.