சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு..!

238

சென்னையில் முதன்மை பள்ளிக்கல்வித்துறையை முற்றுகையிட்டு AISF அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு சமீபத்தில்5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்த என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து AISF  அமைப்பினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முதன்மை பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of