கனமழை காரணமாக சென்னை. காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

1087

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பகலில் விட்டு விட்டு பெய்த மழை, இரவில் வெளுத்து வாங்கியது.

திருவல்லிக்கேணி, அண்ணசாலை, எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை, ராயபுரம் என சென்னை முழுவதும் விடிய விடிய கனமழை பெய்தது.

கனமழை காரணமாக சென்னையில் முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisement