சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, EXPRESS AVENUE மூடல்

518

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, பிரபல வணிக வளாக நிறுவனமான EXPRESS AVENUE மூடப்பட்டுள்ளது. பெரும்பாலான ஓட்டல்களும் மூடப்பட்டுள்ளன.

நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை திரும்பபெற வேண்டும். கனிம பிரிவில் இருந்து தண்ணீரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடிநீர் லாரிகள் ஸ்டிரைக்கால் சென்னையின் பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் சிறிய, பெரிய ஓட்டல்கள், நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றிற்கு தினமும் 100 முதல் 200 லாரிகள் வரை தண்ணீர் தேவைப்படும். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 50 லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டால் வணிக வளாக நிறுவனமான EXPRESS AVENUE மூடப்பட்டுள்ளது. இதேபோல், சோழிங்கநல்லூர், ஓ.எம்.ஆர், பள்ளிக்கரணை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்கியுள்ள வெளிமாநில மற்றும் வெளிநாட்டினரும் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது. ஓட்டல்களை மூடும் நிலை உருவாகி உள்ளது.