தந்தை பாலியல் தொல்லை.. மனஉளைச்சலில் இருந்த சிறுமிக்கு நடந்த இன்னொரு கொடுமை..

1500

சென்னை மேடவாக்கம் பகுதியில் உள்ள பாரதிதாசன் தெருசை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கு 9-ஆம் வகுப்பு படிக்கும் குமுதபிரியா என்ற மகள் உள்ளார். தனது மகளுக்கு சுரேஷ்குமார் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்த நிலையில், அவர் கடந்த 7-ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த குமுதபிரியா, தூக்கிட்டு தற்கொலை செய்துக்கெண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விசாரணை நடத்தியதில், உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

அதாவது, தந்தை பாலியல் தொந்தரவு அளித்த கைது செய்யப்பட்டதில் இருந்தே, சிறுமி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதுமட்டுமின்றி, மாணவிக்கு அக்கம்பக்கத்தினர் பேசும் பேச்சுகள் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுத்தியதால் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் என்று தெரியவந்தது.

பாலியல் தொந்தரவு போன்ற விவகாரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பெற்றோர்கள் தங்களது ஆறுதலை தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்காத பட்சத்தில், இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நிகழும் என்பதற்கு இதுவே உதாரணம்..

Advertisement