“இப்படி பண்ணிட்டியேம்மா..” இரவு தூங்கிக்கொண்டிருந்த மகள்கள்.. தாயின் மோசமான முடிவு..

428

சென்னை கோயம்பேடு அருகே உள்ள பெரியார் நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சண்முகம் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் காரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொள்ள வந்த உறவினர்கள், நிகழ்ச்சி முடிந்ததும், ராஜேஸ்வரிக்கு ஆறுதல் கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பினர். இதையடுத்து, ராஜேஸ்வரி மற்றும் அவரது 2 மகள்களும் இரவு ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

காலை விடிந்ததும், ராஜேஸ்வரி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு, உறவினர்களும், அவரது இரண்டு மகள்களும் கதறி அழுதனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ராஜேஸ்வரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தியதில், கணவன் உயிரிழந்த துக்கம் தாங்க முடியாமல் ராஜேஸ்வரி தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிய வந்தது. தாய் மற்றும் தந்தையை இழந்த 2 குழந்தைகளும் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.