“குளிர்ச்சி, குளிர்ச்சி.. கூல், கூல்”.. நனைந்தது சென்னை

590

சென்னையில் அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மதியம் முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அந்தந்தப் பகுதிகள் குளிர்ந்தன.

தரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், தாம்பரம், ஏர்போர்ட், பூந்தமல்லி, E.C.R உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையின் பல இடங்களில் ஆறு மாதங்களுக்கு பிறகு பரவலாக மழை பெய்துவருகிறது; வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of