“எனக்கு பிடிக்கல” – சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திடீர் ராஜினாமா..?

1472

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான கொலீஜியம் எடுத்த, தஹில் ரமணியை மேகலாய உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்வது என்ற தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

157 ஆண்டுகள் சரித்திரம் கொண்டு 75 நீதிபதிகளுடன் செயல்பட்டு வரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தஹில்ரமணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், தஹில்ரமணியை மேகாலயா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், மேகாலய மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்துகொலிஜியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தகுதியும் அனுபவமும் இருந்த காரணத்தாலேயே நாட்டிலேயே முதன்மை நீதிமன்றமாக கருதப்படும் நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக கொலீஜியத்தினால் தஹில் ரமணி கடந்த ஆண்டு ஆகஸ்டு 8ஆம் தேதி நியமிக்கப்பட்டிருந்தார்.

மேலும் அவர் மீது எவ்வித குறிப்பிடத்தகுந்த குற்றச்சாட்டுகள் எதும் எழுப்பட்டதில்லை.இந்த நிலையில் தலைமை நீதிபதியையும் சேர்த்து மொத்தம் மூன்று நீதிபதிகளே உள்ள நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டசிறிய நீதிமன்றமான மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு தஹில் ரமணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதை அவருக்கு இழைக்கபடும் தகுதிக்குறைப்பு என்று நீதிமன்ற வட்டாரங்களில் கருதப்படுகிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான கொலிஜியத்தின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தஹில்ரமணி கோரிக்கை வைத்துள்ளார். அவருடைய கோரிக்கையை காரணமே கூறாமல் கொலிஜியம் நிராகரித்து விட்டது.

இதனால் தனக்கு பிடிக்காத பதவியில் அங்கம் வகிக்க விருப்பம் இல்லாத தஹில்ரமணி தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of