நளினி, ரவிச்சந்திரனின் மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

215

தமிழக அமைச்சரவையின் தீர்மானப்படி விடுதலை செய்யக்கோரிய நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைப்போல, தங்களை விடுதலை செய்யுமாறு  நளினி, ரவிச்சந்திரன் இருவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

2018 ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, விடுதலை செய்யவேண்டும் என்று மனுவில் அவர்கள் கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீ்ஷ்வரநாத் பண்டாரி தலைமையிலான முதன்மை அமர்வு, உச்சநீதிமன்றம் முடிவு எடுத்தது போல உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நளினியும், ரவிச்சந்திரனும் உச்சநீதிமன்றத்தை அணுகவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.