2-ம் வகுப்பு மாணவி தொடர்ந்த வழக்கு.. அரசுக்கு அதிரடி ஆர்டர் போட்ட ஐகோர்ட்

411

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மேம்படுத்த கோரி 2ஆம் வகுப்பு மாணவி தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இதுகுறித்து மாணவி மற்றும் அவரது தந்தை தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பள்ளியை புதுப்பித்து கல்வி கற்பதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பள்ளி வளாகம் பிச்சைக்காரர்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும், சட்டவிரோத செயல்கள் நடைபெறும் கூடாரமாகவும் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of