4 மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம்..? வழக்கு தள்ளுபடி..!

208

ஊரடங்கு காலத்தில் கடந்த நான்கு மாதங்களாக மின்சார ரீடீங் எடுக்காமல் திடீரென மொத்தமாக ரீடீங் எடுத்ததால் மின்கட்டணம் மிக அதிக அளவில் வருவதாக புகார் எழுந்தது.

இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது.

இந்நிலையில் மின் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் தரப்பில், விதிமுறைகளை பின்பற்றியே மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of