50 சதவீத சுங்க கட்டணத்தை மட்டும் ஏன் வசூலிக்க கூடாது..? ஐகோர்ட் நச்..!

649

சென்னை மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை மிக மோசமான நிலையில் இருப்பதாக நீதிபதி சத்தியநாரயணன், தலைமை நீதிபதி ஏ.பி.சஹிக்கு கடிதம் அனுப்பினார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் மதுரவாயல் முதல் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை வரை மீண்டும் சாலை அமைப்பது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.

இந்தநிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, மதுரவாயல்-வாலாஜாபேட்டை இடையிலான சாலையை முறையாக அமைக்கும் வரை, 50 சதவீத சுங்க கட்டணத்தை மட்டும் ஏன் வசூலிக்க கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும், சாலை பராமரிப்பு தொடர்பாக டிசம்பர் 9ம் தேதிக்குள் பதில் அளிக்க மத்திய சாலை போக்குவரத்து துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தமிழக நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டனர்.

Advertisement