உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை நியமிக்க பரிந்துரை

240

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டல் நியமிக்கப்படுகிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக இருந்த தஹில் ரமாணி மேகாலயா மாநிலத்திற்கு மாற்றப்படுகிறார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியை மாற்றுவதற்கு, நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் பாப்தே, நாரிமன், பி.வி.ரமணா, மற்றும் அருண்மிஸ்ரா ஆகியோரடங்கிய அமர்வு புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.

இதன்படி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே. மிட்டல் நியமிக்கப்படுகிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியான தஹில் ரமாணியை, மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தலைமை நீதிபதி தஹில்ரமாணி விடுத்த வேண்டுகோளை உச்சநீதிமன்ற கொலிஜியம் நிராகரித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of