“பேனர் வைக்க மாட்டோம் என்று ஏன் உறுதியளிக்கவில்லை..” ஐகோர்ட் சரமாரி கேள்வி..!

272

சட்டவிரோத பேனர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியானது தொடர்பான வழக்கு உள்ளிட்டவையை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரித்தது.

அப்போது, சுபஸ்ரீ விவகாரத்திற்கு முன்னதாக, சட்டவிரோத பேனர் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என நீதிபிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்குகளின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, பேனர் வைக்க மாட்டோம் என அதிமுக, திமுகவை போல் மற்ற கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன் என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பேனர்கள் வைக்க அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, இந்த வழக்குகளின் விசாரணையை, பிப்ரவரி 27ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of