ரூ.100 கோடி அபராதம்! உயர்நீதிமன்றத்தால் ஷாக்கில் இருக்கும் தமிழக அரசு

537

சென்னை மாநகரில், கூவம், அடையாறு, மற்றும் பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை பராமரிப்பதற்கு தமிழக அரசு தவறிவிட்டதாக தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சுற்றுச்சூழல் ஆர்வலரான ஜவஹர்லால் சண்முகம் என்பவர், தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமைத்தீர்ப்பாயம் நூறுகோடிரூபாய் அபராதம் விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

இந்த அபராத உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குவிசாரணை நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோரடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின்போது, கூவம் உள்ளிட்ட நதிகளை தூய்மைப்படுத்த 604 கோடிரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதை கருத்தில்கொள்ளாமல் பசுமைத்தீர்ப்பாயம் அபராதம் விதித்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்டும் சென்னையில் நதிகள் இதுவரை தூய்மைப்படுத்தவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நூறுகோடிரூபாய் அபராதம் செலுத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்று தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அரசின் இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், தமிழக அரசு அதிர்ச்சியில் உள்ளது.

Advertisement