A.R.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்..!

475

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரகுமான். பல்வேறு மொழிகளில் இசையமைத்துள்ள இவர் தான் ஏர்டெல் நிறுவனத்திற்கும் அதன் ரிங்டோனை உருவாக்கியிருந்தார்.

இதேபோன்று, இங்கிலாந்து நாட்டில் உள்ள லிப்ரோ என்ற செல்போன் நிறுவனத்திற்காக, ரிங்டோன் இசையை அமைத்துக்கொடுத்தார். இதற்கு சம்பளமாக, 3 கோடி 47 லட்சம் வழங்கப்பட்டது.

இந்த தொகைக்கான வருமான வரியை செலுத்தாமல், ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்கு அளித்து, வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக ஏ.ஆர்.ரகுமான் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

Advertisement