அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயிர் பலி வேண்டுமா? உயர்நீதிமன்றம் நறுக் கேள்வி..!

526

திருச்சியில், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித்தின் மரணத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், ஆழ்துளை கிணறு விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரியும் பொன்ராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒவ்வொரு தனிமனிதனும் சமூக பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என கூறினர். அரசின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயிர் பலி வேண்டுமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து ஊடகங்களும் முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுவரை எத்தனை ஆழ்துளை கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், விதிகளை மீறியவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு நவம்பர் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.