உள்ளாட்சி வார்டு மறுவரையறை நடைமுறைகள் எந்த நிலையில் உள்ளன ?

698

உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை தொடர்பான நடைமுறைகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து அக்டோபர் 9ம் தேதி அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்ததரவிட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை தொடர்பான வழக்கு, நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வார்டு மறுவரையறை செய்வதற்காக ஆணையம் அமைத்து அவசர சட்டம் பிறப்பித்த நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், திருத்தம் செய்து தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வார்டு மறுவரையறை தொடர்பான பணிகளை முடித்து, அறிக்கை தாக்கல் செய்வதாக அரசு தரப்பில் கூறியது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதன் நிலை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினர்.

பின்னர், வழக்கின் விசாரணையை அக்டோபர் 9ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of