நயன்தாராவ மட்டும் தான் தேடுவீங்கலா..? நீதிமன்றம் பளார் கேள்வி!

914

சேலம் மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவரின் 19 வயது மகள் கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மாயமானார். இதுதொடர்பாக மகேஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதைத்தொடர்ந்து தனது மகளை கண்டு பிடித்து தர உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும் தனது மகளை கண்டுபிடித்து தர காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மகேஸ்வரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

மகேஸ்வரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், நயன்தாரா, அனுஷ்கா போன்றோர் காணாமல் போனா தான் நடவடிக்கை எடுப்பீர்களா என்று சராமாரியாக கேள்விகளை கேட்டது.

இதனையடுத்து காவல்துறையினரை கடுமையாக கண்டித்த நீதிமன்றம், வரும் 17 ஆம் தேதி இந்த வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of