நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் : சென்னை ஐஐடி முதலிடம்..!

510

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி (மெட்ராஸ் ஐஐடி) முதலிடம் பிடித்திருக்கிறது.

மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சகம் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான (ஒட்டுமொத்த பிரிவு) தரவரிசை பட்டியல் மற்றும் சிறந்த பல்கலைக்கழங்களக்கான தரிவரிசை(துறை வாரியாக) வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழங்களுக்கான (ஒட்டுமொத்த பிரிவு) தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி 83.88 மதிப்பெண்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை பெங்களூரு ஐஐடியும், 3வது இடத்தை டெல்லி ஐஐடியும், 4வது இடத்தை மும்பை ஐஐடியும், 5வது இடத்தை கராக்பூர் ஐஐடியும் பிடித்துள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 7வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 14வது இடத்தை பிடித்துள்ளது. கோவை அமிர்தா விஸ்வா வித்யா பீடம் 15வது இடதையும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 21வது இடத்தையும் பிடித்துள்ளது.

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் என்ஐடி திருச்சி 24 வது இடத்தையும், வேலூர் விஐடி 32வது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் 33வது இடத்தையும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 47வது இடத்தையும், சென்னை எஸ்ஆர்எம் 52வது இடத்தையும் பிடித்துள்ளது. சென்னை ஸ்ரீராமசந்திரா இன்ஸ்டிடியூட் 54வது இடத்தை பிடித்திருக்கிறது. மேலும் 10 கல்வி நிறுவனங்கள் முதல் 100 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.

ஒட்டுமொத்தமாக முதல் 100 கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த 21 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of