“சென்னை ஐ.ஐ.டி மாணவி மரணம் 3 பேராசிரியர்களின் துன்புறுத்தல்களே காரணம்” – செல்போனில் கிடைத்த அதிர்ச்சி தகவல்..!

5430

சென்னை ஐ.ஐ.டி-யில் கேரள மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் 3 பேராசிரியர்கள் துன்புறுத்தலே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 8ஆம் தேதி கேரள மாநிலம் கொள்ளத்தை சேர்ந்த பாத்திமா என்ற மாணவி சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள மகளிர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மாணவி தற்கொலை செய்தது கொண்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவியின் செல்போனை அவரது குடும்பத்தினர் ஆராய்ந்த போது, அதில் தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் தான் காரணம் என மாணவி பதிவிட்டுள்ளார். அவர்கள் மதரீதியாக தவறாக பேசியதாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் இரண்டு பேராசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்கள் தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of