சென்னையில் உள்ள கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் இந்து முன்னணி நிர்வாகிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் மீது நேற்று முன்தினம் இரவு 15 பேர் கொண்ட கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது.

இதில் அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன்னணியை சேர்ந்த பார்த்தசாரதி, கிருஷ்ணா, சிவவிஜி, சதீஷ், சத்தியநாதன், வேலு ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of