சென்னை தடியடி சம்பவம் – காரைக்கால் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்..!

306

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து காரைக்கால் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் திடீர் தடியடி நடத்தினர். இந்த போராட்டத்தின்போது அதில் பங்கேற்ற முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் இந்த தடியடி சம்பவத்தை கண்டித்து காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினத்தில் உள்ள மார்கெட் அருகே திருப்பட்டினம் இஸ்லாமிய குழுமம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிரவி – திருமலைராயன்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆனந்தன், காரைக்கால் சலீம், உள்ளிட்ட பலர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமலைராயன்பட்டினம் வணிகர்கள், ஆண்கள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு CAA -க்கு எதிராகவும், சென்னை வண்ணாரப்பேட்டை தடியடி நடத்தியதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of