சென்னை தடியடி சம்பவம்.. – இராமநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

435

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய சென்னை வண்ணாரப்பேட்டை மக்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து ராமநாதபுரத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் திடீர் தடியடி நடத்தினர். இந்த போராட்டத்தின்போது அதில் பங்கேற்ற முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்றிரவே தமிழகம் முழுவதும் அனேக இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இன்று ராமநாதபுரம் சந்தைக்கடை திடலில் சென்னை தடியடி சம்பவத்தை கண்டித்தும், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-க்கு எதிராகவும் முழக்கம் எழுப்பப்பட்டது.

Advertisement