சட்டக்கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் மோதல்… – பதறவைக்கும் காட்சி..!

255

சென்னை பல்லாவரத்தில் உள்ள சட்டக்கல்லூரி  மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் ஒருவரையொருவர் தாக்கிகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல என்ற பெயரில் யார் உண்மையான ரூட் தல என்பதில் அடிக்கடி பிரச்சனைகள் வரும். ஒருகட்டத்தில்  சென்னையில் பிரதான சாலைகளில் இறங்கியும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு தாக்கிக்கொள்வர். 

அப்படி ஒரு சம்பவம் மீண்டும் சென்னை பல்லாவரத்தில் அறங்கேறியுள்ளது. அதுவும் சட்டம் படிக்கும் மாணவர்கள் ஒருவரையொருவர் பட்டாக்கத்தியோடு தாக்கிக்கொள்ளும் சம்பவம் பொதுமக்களிடையே முகசுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of