“நீ வா.. நம்ம பாத்துக்கலாம்..” நைசாக பேசி மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்..!

1811

சென்னை செங்குன்றம் அருகே உள்ள பொதுப்பணித்துறை ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் முருகன். 32 வயதாகும் இவர், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு, சுகன்யா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சுக்னயாவிற்கும், நாரவாரிகுப்பத்தை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுகுறித்து அறிந்த முருகன், மனைவியை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல், சுகன்யா தனது கள்ளக்காதலனோடு தனியாக வீடு வாடகை எடுத்து வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில், மனைவியை நேற்று பார்க்க சென்றுள்ளார். அப்போது, நாம் மீண்டும் வாழ்க்கையை தொடங்கலாம் என்று அவரிடம் ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

சிறிது தூரம் சென்றதும், ஆட்டோவை நிறுத்திய முருகன், மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு, தனது மனைவியின் கழுத்தை அறுத்தார். பின்னர், சுகன்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்துள்ளனர்.

அவர்களிடம், சுகன்யாவை தனது ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன் என்று திடீர் நாடகமாடிய முருகன், அவரை செல்லும் வழியிலேயே இறக்கி விட்டுள்ளார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுகன்யாவை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், முருகனை கைது செய்தனர்.