மெரினாவுக்கு செல்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்.. இல்லையென்றால் அபராதம்

1394

மெரினா கடற்கரை மணற்பரப்புக்கு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஊரடங்கில் இந்த மாதம் தொடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கடற்கரைக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையே தொடருகிறது. ஆனாலும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக கடற்கரைக்கு செல்லும் வழக்கத்தை கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் கடந்த 2 வார ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. போலீசார் எவ்வளவோ அறிவுறுத்தியும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து சென்னை மெரினா போலீசார், கடற்கரையோரப் பகுதிகளில் ஆங்காங்கே விளம்பரப் பலகை வைத்திருக்கின்றனர். அதில் ‘மெரினா கடற்கரை மணற்பரப்புக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

மீறினால் அபராதம் விதிக்கப்படும்’ என்று பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வைத்து இருக்கின்றனர். மேலும் கடற்கரை மணற்பரப்புக்கு செல்லும் பகுதியில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு இருக்கின்றனர். இருப்பினும் சிலர் போலீசாரின் எச்சரிக்கை, தடுப்பை மீறி மணற்பரப்புக்கு செல்கின்றனர்.