8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

513

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோர பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வாகன மேக மூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகரில் மேகமூட்டத்துடன் வானம் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 18ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுவதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Advertisement