2 மாவட்டங்களில் மிக கனமழை  – வானிலை மையம் எச்சரிக்கை

638

உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை , நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிக கன மழை பெய்யும் என்று மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், வேலூர், திருவள்ளூர்,  திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தஞ்சாவூர்,  திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவித்தார்.

அடுத்த 48 மணி நேரத்தில் உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் புவியரசன் தெரிவித்தார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24  மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும் அடுத்த 48  மணி நேரத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.

Advertisement