மழை பெய்ய வாய்ப்பு! List வெளியிட்ட வானிலை மையம்! உங்க மாவட்டம் List-ல் இருக்கா..?

638

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் வட தமிழகமான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சம் தஞ்சாவூரில் ஒரு செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of