ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

145

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும், இதனால், தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலில்1.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of