14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! எந்தெந்த மாவட்டங்களில்..! லிஸ்ட் இதோ..!

450

தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, வெப்பச் சலனம் காரணமாக கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு எனவும், மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of