இதுவே தாங்க முடியல! இன்னும் 6 ஆம் தேதி வேற இருக்கா?

451

கோடை கால துவக்கத்திலேயே பல ஊர்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் வரும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பூர், தருமபுரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் நாமக்கல், வேலூர், கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் இன்று இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.