“மினி ஹால்” உரிமையாளர்களிடம் வசூல் சென்னை வடபழனி போலீசார் காட்டில் மழை..

571

கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணங்களில் குறைந்த ஆட்களுக்கு மட்டுமே அரசின் விதிமுறைகள் அனுமதியளிக்கிறது.

அதனால்,ஆடம்பரமாக திருமணம் செய்ய நினைத்தோர் கூட தற்போது மினி ஹால்களையே அதிகம் முன்பதிவு செய்து திருமணம் செய்து வருகின்றனர்.
சென்னையை பொறுத்தவரை, திருமண மண்டபங்கள் மாநகராட்சி நிர்வாகம் வசம் சென்றிருப்பதால், பெரும்பாலான திருமணங்கள் மினிஹால்களிலேயே நடைபெற்றுவருகிறது.பிரசித்திபெற்ற வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்வது சிறப்பு என்பதால் பலர் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு வழபழனியை சுற்றியுள்ள மினி ஹால்களில் திருமணங்களை நடத்திவருகின்றனர்.கடந்தவாரம், அரசு விதிமுறைகளுக்கு மாறாக வடபழனி பகுதியில் உள்ள மினி ஹால்களில் அதிக நபர்கள் கூடுவதாக காலை நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

அதன்,அடிப்படையில் சம்பந்தப்பட்ட மினி ஹால் உரிமையாளர்களை அழைத்து சென்னை வடபழனி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து
விசாரணை நடத்தியுள்ளனர்.

அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு 50 நபர்களுக்கு மேல் அனுமதிப்பதில்லை என ஹால் உரிமையாளர்களும் தெரிவித்துள்ளனர்.தற்போதுள்ள நெருக்கடி மற்றும் தங்களது சிரமங்களை கூறியுள்ளனர். அதன் பின்னர்,
போலீசாரின் விசாரணை கொஞ்சம் கொஞ்சமாக மிரட்டலாக மாறியுள்ளது.

10 ஆயிரம் ரூபாய் ஒரு கவரில் போட்டு மூர்த்தி என்ற ஹால் உரிமையாளர் கொடுத்தவுடன் தான் சமாதானமாகி ஹால் உரிமையாளர்களை அனுப்பி வைத்துள்ளனர் வடபழனி போலீசார். மாதா மாதம் வந்து பார்த்துட்டு போங்கப்பா என்று அறிவுரை வேறு சொல்லியுள்ளனர்..

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of