“பேக் மிஸ்சிங் சார்..” மீட்டுக்கொடுத்த போலீஸ்..! பையை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி..! புகார் கொடுத்தவர் கைது..!

704

கேரளாவை சேர்ந்த சிராஜ் என்ற இளைஞர், சென்னை மின்ட் தெருவில் பொருட்கள் வாங்கச் சென்ற போது, ஆட்டோவில் தனது பையை தவறவிட்டதாக யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த பையில் 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் லேப்டாப் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், புகார் அளித்த 12 மணிநேரத்திற்குள் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் ஆட்டோவை கண்டுபிடித்து பையை மீட்டனர்.

ஆனால் அந்த பையில் 75 லட்சம் ரூபாய் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து போலீசார் சிராஜிடம் விசாரணை நடத்திய போது, அவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து சிராஜ் பணத்துடன் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.