குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சென்னை போலீசார்..! உதவும் அம்மா ரோந்து வாகனம்..!

354

தமிழக காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு தொடங்கப்பட்டது. 03-06-19 அன்று சென்னையில் அதன் பிரிவை சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.

அவரது நேரடி கட்டுப்பாட்டில் காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் 35 மகளிர் காவல் நிலையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவுக்கு, கடந்த 26-08-19 அன்று தனியாக 40 வாகனங்கள் 7 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் தமிழக அரசால் வழங்கப்பட்டது.

மேலும் தனியாக பெண்கள் உதவி மைய எண் 1091, குழந்தைகள் உதவி மைய எண் 1098 ஆகிய அறிமுகம் செய்யப்பட்டது. அந்த எண்களுக்கு வரும் அழைப்புக்களுக்கு உடனடியாக ‘அம்மா ரோந்து வாகனங்கள்’ மூலம் விரைந்து சென்று போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், ராயபுரம் மகளிர் போலீசார் மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். 17 வயது பெண்ணிற்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்

புளியந்தோப்பு மகளிர் போலீசார், பள்ளிப்படிப்பை தொடரமுடியாத மாணவிக்கு உதவி செய்துள்ளனர்.

காணாமல் போன 86 வயது மூதாட்டியை கண்டுபிடித்து அவரது மகனிடம் திருவெற்றியூர் போலீசார் ஒப்படைத்துள்ளனர்

அம்பத்தூர், அயனாவரம், மயிலாப்பூர் மகளிர் போலீசாரும் பல்வேறு சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்மா ரோந்து வாகனங்கள் மூலமாக பள்ளி கல்லூரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னும் சிறப்பாக பணியாற்றுங்கள்..

சத்தியம் டிஜிட்டலின் வாழ்த்துக்கள்..

Advertisement