ஆண்களின் மர்ம உறுப்பை அறுக்கும் சைக்கோவின் சிசிடிவி காட்சி வெளியீடு

1309

சென்னையில் ஆண்களின் பிறப்பு உறுப்பை அறுத்து கொலை செய்யும் சைக்கோ கொலைக்காரனின் வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

சென்னை மாதவரம் பகுதியில் கடந்த மாதம் 25-ம் தேதி சாலையோரம் படுத்துறங்கிய அஸ்லாம் என்ற நபரின் பிறப்பு உறுப்பை ஒருவர் அறுத்துவிட்டு தப்பியோடினார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஸ்லாம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 2-ம் தேதி ரெட்டேரியில் நாராயணன் என்ற இளைஞரின் பிறப்பு உறுப்பை அந்த சைக்கோ கொலைகாரன் அறுத்துவிட்டு தப்பிச்சென்றான். அந்த சைக்கோ கொலைகாரனை பிடிக்க போலீசார், 4 தனிப்படைகள் அமைத்தனர்.

இதனிடையே சைக்கோ கொலைகாரனின் சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.இரண்டு வழக்குகளிலும் சைக்கோ கொலைகாரனின் செயல் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

சைக்கோ கொலைகாரன் குறித்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, அவனைப் பிடிக்க பொதுமக்கள் உதவியை போலீசார் நாடியுள்ளனர். சைக்கோ கொலைகாரன் ஓரினச் சேர்க்கைக்காக ஆசைகாட்டி, ஆண்களது பிறப்பு உறுப்பை அறுத்து கொலை செய்வது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுபோன்ற குரூரமான செயல்களுக்கு காரணம் என்ன என்பது பற்றி உளவியல் மருத்துவரை அணுகினோம். அதற்கு உணர்வுகளைச் சமநிலைப் படுதத முடியாததே முக்கிய காரணம் என்றும் இளம் வயதில் ஏற்பட்ட மோசமான அனுபவமும் காரணமாக இருக்கும் என்று உளவியல் மருத்துவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of