சென்னையில் பொழிந்த மழை..! வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..! – சிறப்பு தொகுப்பு

2904

சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்தது தொடர்பாக எமது வாசகர்களிடம் கவிதை எழுத கேட்டிருந்தோம்.. பல்வேறு கவிதைகள் கிடைக்கப்பெற்றதில் சிறந்த 5 கவிதைகளை தேர்ந்தெடுத்து பிரசுரித்துள்ளோம்..

சென்னையில் மழை..!

(வாசகர்களின் கவிதைகள்)

உல‌கில் முக்கால் பாக‌ம் நீதான்!
ஆயினும் நீ கிடைக்க‌வில்லை என உல‌க‌மே அழுகிற‌து…!

வாய்க்கால், குளம், குட்டை வ‌ற்றாத‌ நதி, கடல் என்று உன‌க்குப் ப‌ல‌ முக‌ங்க‌ள்…
ஆத‌வ‌னின் அணைப்பில் ஆர்வமாய் க‌ருவுற்று …

மேக‌ங்க‌ளைப் பிர‌ச‌வித்து வேக‌மாய் நீ ம‌ண்ணில் குடிபுகுவாயென‌..
தாக‌மாய் நாங்க‌ள் இங்கு சோக‌ச் சூழ்நிலையில்…!

நீ குதித்தால் அலை…! கொதித்தால் சுனாமி..!

அணைக்க‌ட்டுமா என நீ எங்க‌ளை நோக்கி ஆவ‌லோடு வ‌ரும் வ‌ழியில்
அணைக்க‌ட்டுக்க‌ளைக் க‌ட்டி

உனது ஆசையையும், பாச‌த்தையும் கெடுக்கிறார்க‌ள் அண்டை மாநில‌த்தார்..!

                                                                                – கிருஷ்ணா கிங்

பணத்தேவையை புரிந்த சென்னை மக்கள் வங்கிகள் பல அமைத்தார்கள்…!

மழைநீரை சேமிக்க மனமில்லாத மக்கள்…!

ஒரு முறை மழை வந்தால் கவிதை எழுதி மறப்பார்கள்..!

                                                                             – அஷ்ரப் அலி

 

மண்ணின் மணம் வீசியபோது….
வறண்ட இந்த மண்ணில் பொழிவாய் என்று நினைத்து…..
மகிழ்ச்சியில் மிதந்த போது….
சில துளியை தெளித்துவிட்டு அரசியல்வாதியை போல்
ஏமாற்றிச் சென்றது ஏனோ…?

                                                                            – விஜய குமாரி

எதார்த்தமாய் வந்தாய்…!
எடப்பாடியை காத்தாய்…!

                                                                           – ஜாஃபர் உசேன்

நீ எப்பொழுது வருவாய் என்று எதிர்பார்த்த உன்னை…!
நீ வந்த உடன் எப்படி வரவேற்பது என்று தெரியாமல் போனது…!
நீ என்னை தேடி வரும் போது எல்லாம் நான் உன்னை அலட்சியம் செய்ததே என் ஞாபகத்தில் உள்ளது..!
உன் அருமை தெரிந்த பின் உன் வரவுக்காக காத்து கொண்டு இருக்கிறது என் இதயம்..!

                                                                          – மேரி இருதயராஜ்

தினந்தோறும் குமுறுகிறேன் உன் வருகைக்காக….

நீ வராத அந்த நாட்கள் என்றும் நரகமாகிறது நகரம்….

நீ முத்தமிடுவாய் என்ற ஏக்கத்தில் காய்ந்து கிடக்கிறது இந்த தரிசு நிலம்….

மொத்தமாய் நீ கொடுத்த அந்த முத்தங்களின் அருமை தெரியாமல் உன்னை விட்டு விரண்டோடினோம்….

நீ இடம் தேடி அலையும்பொழுது அதில் எங்கள் சுயநலம் மட்டுமே பதிலாக இருந்தது….கட்டிடங்களாக….

இன்றோ எங்களின் மீது இரக்கம் காட்டியிருக்கிறாய்… நானோ வெட்கி தலைகுனிந்திருக்கிறேன்…
உன் வரவை காண தைரியமின்றி….

                                                                    – அ.கிளுர் முகம்மது

 

(பொறுப்பு துறப்பு : சத்தியம் தொலைக்காட்சி இணையதளத்தில் வெளியாகும் (கட்டுரைகள் மற்றும் கவிதை) கருத்துக்கள் அனைத்தும் வாசகர்களின் கருத்தே ஆகும்.. வாசகர்களின் கருத்திற்கு சத்தியம் தொலைக்காட்சி பொறுப்பல்ல..)

 உங்களுடைய படைப்புகளும் எமது தளத்தில் உலா வரவேண்டுமா?

 இதோ உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு!

உங்களுடைய சிறந்த படைப்புகளை(கட்டுரை,கவிதை) சத்தியம் டிவியின் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்…

சிறந்த படைப்புகள் நமது சத்தியம் இணையதளத்தில் பிரசுரமாகும்.

நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : digitalsathiyam(at)gmail.com

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of