விடுதி அறைக்குள் ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை…!

736

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மாணவர் கோபால் பாபு. 26 வயதான இவர் சென்னை ஐஐடியில் எம்.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தார். வெளிமாநிலம் என்பதால் இங்குள்ள பிரம்மபுத்திரா என்ற விடுதியில் தங்கி வந்தார்.இந்நிலையில், இவர் தனது அறையில் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விடுதி நிர்வாகத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தந்தார்கள்.

விரைந்து வந்த போலீசாரும் தூக்கில் தொங்கிய மாணவரின் சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு ம்ருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மாணவரின் தற்கொலைக்கு காரணம் உடனடியாக தெரியவில்லை.

தானாகவே மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது தற்கொலைக்கு காரணம் யார்? என்பது குறித்த விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 5 மாதத்தில் மட்டும் ஐஐடியில் 3 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எனவே தொடர்ச்சியாக இந்த வளாகத்தில் மாணவர்களின் தற்கொலை அதிகரிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதுடன், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of